தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
C-Digest
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
இலக்கியத் துணுக்கு இலக்கியம்
காளமேகப்புலவர்-1  

அதிமதுரகவி, திருமாள் அவதாரம் பத்தினையும் ஒரு வெண்பாவில் அடக்கி பாடவேண்டும் என்று கோரியபோது, காளமேகப் புலவர், ''இதற்கு, ஒரு வெண்பா வேண்டுமோ, நான் பாதி வெண்பாவில் பாடுவேன்'' என்று பாடியது.,

மெச்சுபுகழ் வேங்கடவா வெண்பாவிற் பாதியிலென்
இச்சையிலென் சென்ம மெடுக்கவா-மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமாவா வாய்.

பொருள்:

மெச்சு-தேவர். முனிவர் யாவரும் மெச்சுகின்ற புகழ் உடைய வேங்கடவா, இச்சையில் என் விருப்பப்படி வெண்பாவின் பாதியில் உன் திரு அவதாரம் பத்தையும் எடுத்துக் கூறுவதற்கு வா-எழுந்தருள்வாய். மச்சா-மச்சாவதாரத்தை செய்தவனே, கோலா-வராஹா, கூர்மா, சிங்கா-நரசிம்ஹா, வாமா-வாமனனே, ராமா-பரசுராமா, ராமா-தசரதராமா, ராமா-பலராமா, கோபாலா-கிருஷ்ணா, மாஆவாய்-இனி கல்கி அவதாரம் செய்யப்போகிறவனே! என்று பாடினார்.

ஹெச். ராமகிருஷ்ணன்

Published on 11th Dec, 2007


Recommend this page

Mail us your feedback

 
மேலும்
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera