ராம: உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள்...?
சிவ: மறக்கவே முடியாதவங்கன்னா ரெண்டு பேரு. ஒண்ணு எங்க அம்மா. இன்னொன்னு எங்க மாமா. என்னுடைய வாழ்க்கைக்காக என்னுடைய தாயார் ஒரு கிராமத்து பெண்மணி, 7 வருஷம் வெறும் கேழ்வரகு மட்டுமே சாப்பிட்டு, நிலத்துல பாடுபட்டு பணத்தை மிச்சம் வச்சாங்க. இந்த வாழ்க்கையின் நேர்மை, ஒழுக்கம் எல்லாம என் தாயார் போட்ட பிச்சை.
ரெண்டாவது மாமா. அதாவது என் அம்மாவினுடைய பெரியம்மா பையன். இன்றைக்கு சொந்த அண்ணன் தம்பிகளே உதவி செய்யாத இந்த காலத்துல அம்மாவினுடைய ஒன்றுவிட்டு சகோதரன் எங்கேயோ ஒரு படிப்பறிவு .இல்லாத ஆளு, பொள்ளாச்சியில ஒரு சாதாரண ஆளு.
அந்த மனிதன், என்னுடைய சொந்த பசங்களவிட நீ நல்ல படிப்பேடா அப்படீன்னு சொல்லி ஏழு வருஷதம் நான் படிக்கறதுக்கு பணம் கொடுத்தாரு. என் அம்மா தன் உழைப்புனால அந்த பணத்தை எங்கம்மா திருப்பிக் கொடுத்தாகூட, ரயில்ல அன்ரிசர்வ்ட் காம்காணாமென்ட்ல சென்னைக்கு வந்து தான் ஒரு டயாபடிக்ஸ் பேஷண்ட் என்பதை மறத்து இங்க ரேண்டு நாள் தங்கி சிவாஜி சார் காண்பிச்சி என்னை படிக்கச் சொல்லி வற்புறுத்தலன்னா............... இந்த வாழ்க்கை வந்து அவர் போட்ட பிச்சைதான். அந்த ரெண்டு பேரையும் நான் மறக்கமுடியாது,
ராம: அவரு பேரு?
சிவ : ஆறுமுக கவுண்டர்.
ராம: குமாரசாமி..... குமசேரன் என்ற இருரை பற்றி....................
சிவ: அவங்களும் என்னுடைய வாழ்க்கைல ரொம்ப முக்கியமானவங்கதான். வாழ்க்கைல சோதனையான கால கட்டங்கள்லயும், உணர்ச்சிபூர்வமான கால கட்டங்களிலும் முடிவு எடுக்கக்கூடாது. நிதானமா அறிவுபூர்வமா முடிவு எடுக்கணும். சாலை சந்திப்பில வந்து நிக்கும்போது நின்ணு நிதானமாக முடிவு எடுக்கணும்.
அம்மா சொல்றாங்க என்பதற்காக நீ ஒரு முடிவு எடுத்துவிடக்கூடாது. நீ ஓவியராகவேணும்னா அதற்கான முயற்சியை பண்ணணும் அப்படீன்னு உரிய நேரத்துல அறிவுரை சொன்னவர் குமாரசாமி.
குமரேசன் என்பவர் என்னுடைய சின்னம்மாவோட பையன். அதைவிட அவரை என்னுடைய சிஷ்யனாக்கலாம்னு நினைப்பேன். என்னைவிட வயசுல 3 , 4 அதிகம் என்றால்கூட ஒரு உருவாக்கிய ஒரு மனிதன் என்றுதான் சொல்லுவேன்,. ஊர்ல சின்ன கிராமத்தில மளிகைக்காரருடைய நிலத்தை பார்த்துகிட்டு மாசாமாசம் கேழ்வரகு ஒரு மூட்டை. சமைச்சு சாப்பிடுவாரு. அந்த மாதிரி ஒரு பையனை என்னுடைய மாமா ஆறுமுகம் என்பவருடைய சிபாரிசுல, சூளுர் பக்கத்துல ஜவுளி ஆலைல வேலை வாங்கிக் கொடுத்தேன். மாலை நாலு மணி வரைக்கும் காலை வேலையை பார்த்து, பள்ளிக்கூட வாத்தியார் வீட்டுக்கு போய் முதல் வகுப்பு புத்தகங்களை படிச்சி, அதே வாத்தியார்கிட்ட படிச்சி பாஸ் பண்ணி ரெண்டாம் கிளாசுக்கு போவாரு.
ரெண்டாம் க்ளாஸ் பாடபுத்தகங்கள் எல்லாம் படிப்பாரு. இப்படியே அந்த னிதன் பத்தாண்டுகள், பள்ளிக்கூடத்துக்கே போகாம பத்தாம் வகுப்பு தேர்வு கணக்கு, சமூக வியல் எல்லாம் படிச்சி போனாரு. சுய முயற்சியினாலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனுஷன் குமரேசன். இப்ப நான் செத்துப்போனேன்னா அவரும் செத்துப் போயிடுவாரு.
அவருடைய மகள் வந்து இப்ப அமெரிக்காவுல பாஸ்டன்ல ஒரு கம்ப்யூட்டர் மேதையா இருக்காங்க. சரோஜான்னு பேரு. 50, 60 பேர் வேலை பார்க்கக்கூடிய அந்த நிறுவனத்துல மிக உயர்ந்த பதவியில இருக்காங்க. அந்த குமரரேசனும் மறக்க முடியாதவர்களில ஒருவார்.
ராம: உங்களை திரையுலக மார்க்கண்டேயன்னு சொல்லுவாங்க. இந்த இளமையின் ரகசியம்........?
சிவ: அதாவது சார், இத நான் ஒரு பட்டமா எடுத்துக்கறேன். ஏன்னா பத்ம ஸ்ரீ நிறைய பேர் இருக்காங்க. பத்மபூஷனுக்கும் நிறையபேர் இருக்காங்க. பாரத ரத்னாவுக்கு ஒரு 7,8 பேர் இருப்பாங்க. அதெல்லாம் பட்டம். விருதுகள். திரையுலக மார்க்கண்டேயன் என்பது ஒரு அடையாளம். 1965-ல் நான் எஸ்எஸ் வாசனை சந்தித்தபோது, நீ தமிழ பைனயன்தானா சிவகுமார்னு பேரு வச்சிருக்க. ஏன் சார்னு கேட்டேன். உதய குமார், கல்யாண குமார்னு கன்னடத்து காரங்கதான் பேர் வைப்பாங்க. சிவகுமார்ங்கறது தமிழ்நாட்டுக்கு புதுப்பேர் ஆச்சே அப்படீன்னு சொன்னாரு. உள்ளபடி சிவகுமார் அப்போ ஒரு புது பெயர்தான். டெலிபோன் டைரக்டரியை பார்த்தீங்கன்னா, சிவகுமார் அப்படீன்னு ஒரு நாலஞ்சு பேர் இருப்பாங்க. இப்ப எடுத்து பார்த்தீங்கன்னா ஐயாயிரம் பேர் இருப்பாங்க.
இப்ப சிவகுமார்னு சொன்னீங்கன்னா எந்த சிவகுமார்னு கேப்பான் ஆனால் திரையுலக மார்க்கண்டேயன்னு ஒரு வார்த்தையை போட்டோ ம்னா அரு ஒரு ஆளை தான் குறிக்கிறது. அது ஜனங்கள் எல்லாம் பார்த்து விருப்பப்பட்டு வச்ச பேரு. என்னுடைய அடையாளமா அதை நான் வச்சிகிட்டு இருக்கேன்.
அதுக்கு எப்படி தகுதி அப்படீன்னு கேட்டீங்கன்னா?
இளைஞனாக இருப்பது என்பது வேறு. ஒரு வயசுக்கு அப்புறம் இளமை தோற்றத்தை பராமரிப்பது என்பது வேறு. காபி சாப்பிட்டு 50 வருஷம் ஆறது. தொடர்ந்து 50 ஆண்டுகளாக யோகாசனம் பண்ணிட்டிருக்கேன். மது பழக்கமோ மற்ற பழக்கங்களோ இல்ல. இந்த 45 ஆண்டுகள்ல பார்த்தீங்கன்னா நான் 24 மணிநேரம் தொடர்ந்து ஷுட்டிங் போனது அபூர்வமா இருக்கும். இரவு என்றால் இருபது நாள் வொர்க் பண்ணுவேன். பகல் பூரா ஓய்வெடுத்துக் கொள்வேன். நிறைய பணம், நிறைய புகழுக்கு ஆசைப்பட மாட்டேன். ஆரோக்கியம் முக்கியம். மனசு முக்கியம்னு நினைப்பேன். இப்படி பல அம்சங்கள் ஒரு மனிதனுககு இளமைத் தோற்றத்தை கொடுக்கின்றன.
(தமிழ் இலக்கிய ஈடுபாடு, கம்பராமாயணத்தில் கவர்ந்த இடங்கள், மிகவும் கவர்ந்த எழுத்தாளர், மிகவும் ஈர்த்த வைரமுத்துவின் வரிகள், ஓவியக் கல்லூரி அனுபவம், திருக்கழுக்குன்றம்வரை சைக்கிளில் சென்று ஓவியம் வரைந்த அனுபவம், குதிரை சவாரி அனுபவம், கிட்டத்தட்ட 150 பெண்களுக்கு தாலி கட்டிய அனுபவம்... இப்படி பல சுவையான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அடுத்த பகுதியில்)
Part I  Part II  Part III  Part IV
First page 1 2 Second Page
|