|
பற்களை துலக்குதல் தமிழர்கள் அறிவார்ந்த
இலக்கியத்தில், ஆதி காலத்திலேயே பற்களின் அடிப்படையான
சுகாதார விதிகளை கூறியுள்ளார்கள். "ஆலும் வேலும்
பல்லுக் குறுதி" என்பதனை நாம் அறிவோம். இது ஒரு
அறிவியல் உண்மை.
இந்த இயற்கை விழுது, வேர்களால் பற்களுக்கும் அதனை
தாங்கியிருக்கும் ஈறுகளுக்கும் நோய் வராமல் தடுக்க
சக்தியுள்ளது. ஆராய்ச்கிள் இதனை நிரூபிக்கின்றன.
எனினும் நவீன நைலான் பல்துலக்கிகள், பற்பசை பற்களை
துலக்க உருவாக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக,
பல்துலக்கியின் மூலம், தினந்தோறும் காலையும் இரவு
படுப்பதற்கு முன்னும் என்று இருமுறை உபயோகித்து
பற்களின் தூய்மையை காப்பாற்றப் படவேண்டும். பற்
துலக்கியை சுற்று முறையில் உபயோகிக்க வேண்டும்.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு வண்ணங்கள்.
வாசனைகள் கொண்ட பற்பசையை ஏற்றுக் கொள்ளலாம். எனினும்
புளோரைடு உப்புச் சத்துக் கொண்ட பற்பசையை உபயோகிப்பதால்,
குழந்தைகளின் பால்பற்களுக்கு சொத்தை வராமல்
தடுக்கவியலும். அதன் மூலம் நிரந்தர பற்களும் சொத்தை
நோயின்று பாதுகாக்க முடியும்.
குழந்தைகளுக்கு சிறிய பல் துலக்கியும், விடலை
பருவத்தினருக்கு மத்திய அளவிலான பல் துலக்கியும்,
வளர்ந்தவர்களுக்கு பெரிய பல் துலக்கியும் உள்ளன.
ஒவ்வொருவரின் தேவைக்கு தகுந்த பல் துலக்கியை
உபயோகிக்கலாம். சிறப்பாக பற்களை துலக்க, இரு
மாதத்திற்கு ஒருமுறை பல்துலக்கியை மாற்றுவது நன்று.
பற்பொடியை கொண்டு பற்களை தேய்க்கக்கூடாது. எத்தனை
நுண்ணிய பற் பொடியாயினும்,. அவைகள் பற்களை
தேய்த்துவிடும்.
பல்துலக்கி, பற்பசை மூலம் பற்களை துலக்கியப் பின்னர்,
வாய் நிறைய நீர் கொண்டு கொப்பளித்து விடவும்.
அதனால் பற்கள் பாதுகாக்கப்படுகின்றன. |