|
பழக்க வழக்கங்கள் நல்ல
பழக்கங்களை நாம் அறிவியல் மூலம் அறிந்துள்ளோம்.
கந்தையானாலும் கசக்கி கட்டு கூழானாலும் குளித்துக்குடி,
ஆலும் வேலும் பல்லுக்குறுதி. இது தமிழர் ஆதி
காலத்திலேயே அறிந்த அடிப்படை அறிவியல் சுகாதார
விதிமுறைகள். இன்னும் வெகுவாக பொருந்தும்.
துர்பாக்கியமாக, தீயவிளைவுகளை
உண்டாக்கும் வாயின் பழக்க வழக்கங்களை இன்றும் நமது
சமுதாய மக்கள் கொண்டுள்ளார்கள்.
மக்கள் தீயவை என அறிந்திருந்தும்,
அந்த பழக்கங்களை கையாளுவது. தன்னைத்தானே சவக்குழிக்கு
சீக்கிரமாகவே அழைத்து செல்வது மட்டுமில்லாமல், வாழும்
காலத்தில் தீவிர வேதனைகளுக்கும் உட்படுகிறார்கள்.
முக்கியமாக புகையிலை, புகையிலை
சார்ந்த பழக்க வழக்கங்கள். உதாரணமாக பீடி, சிகரெட்,
சருட்டு, மூக்குப் பொடி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பான்பராக், குட்கா ஆகியவை வாயிற்கு பரம விரோதிகள்.
போதை தரும் மருந்துகள் வாய்
மற்றுமில்லாமல் வாழ்வையும் கெடுக்கும்.
தமிழ்நாட்டில் உபயோகிக்கும் மிளகாய்,
வாய் புற்றுநோய் மற்றும் வயிற்று புற்று நோயையும்
ஏற்படுத்துகிறது. விரல் சப்பும் பழக்கம், ஒரு பக்கமாக
படுத்துறங்குதல், மெல்லும் ரப்பர் மிட்டாய், பென்சில்
கடித்தல், நகம் கடித்தல் போன்ற பழக்கங்கள் பற்களை
பாதிக்கும். |