|
பற் பரிசோதனை
இன்றைய மருத்துவ முறையில் நோய் வந்து
குணப்படுத்துவதை விட, நோய் வராமல் தடுப்பதே குறிக்கோள்
என மருத்துவர்களும், உலக நல கழகமும் (WHO) கூறுகிறது.
இதனை நாம் உணரவேண்டும்.
இது முடியும்.
இன்றைய மருத்துவமனையில், நமது உடலில் ஏற்படும்
மாறுதல்களையும், நோய்களையும், நாமே அறிய முடியும்.
ஆகையினால், மக்கள் இந்த அறிவைப்பெற்று, தன்னைத்தானே
தினந்தோறும் உடல் பரிசோதிக்கும் முறையில், பற்களை
நாக்கின் உணர்வினாலும், பற்களை துலக்கும்போது கைவிரல்
உணர்வினாலும், கண்ணாடி முன்னால் நின்று காணும்போதும்,
பற்களுக்கு ஏற்படும் மாற்றங்களையறிந்து அதற்கான
தற்காப்பு மருத்துவம் பெறவேண்டும்.
மேலும் நாம் அறியா முறையிலும், நமது கண்களுக்கு
புலப்படாமல் இருக்கின்ற பற்களின் அமைப்பில்
ஏற்படுத்தும் மாற்றங்களை பல் மருத்துவ நிபுணர்கள் தமது
மருத்துவ அறிவியல் அறிவினால் கணிக்க முடியும்.
ஆகையினால், ஆறு மாதங்களுக்கு ஓருமுறை பல்
மருத்துவரிடம் சென்று பற்பரிசோதனை செய்து, வேண்டிய
மருத்துவம் பெற்றால் பற்களை காப்பாற்றலாம்.
தேவை என்பதைவிட, கண்டிப்பாக பற்களுக்கு முக்கியமாக
முழுவதுமாக எக்ஸ்ரே எடுத்து பார்ப்பதால் நம்மை அறியாமல்
மறைமுகமாக உருவாகும் பற்ப்பிணியை அறிய முடியும். |