|
வாய் துர்நாற்றத்திற்கான பல காரணிகள்
கெட்ட சுவாசத்தைப் பற்றி, அதன்
பாதிப்புக்குள்ளானவர்கள், பலவிதமான புகார்களைப் பெரும்
கவலையுடன் எழுப்பி வருகிறார்கள். இந்தப் பாதிப்பின்
பெயர் ஹாலிடாசிஸ் (HALITOSIS). ஆரோக்கியமான ஒவ்வொரு
மனிதனுக்குமே ஒரு வாடை உள்ளது. மூக்குத் துவாரத்தின்
உட்பகுதியில் உள்ள தோலில் நுகரும் சக்திக்குரிய
சுரப்பிகள் உள்ளன. சளியால் சூழப்பட்ட இப்பகுதி பிறந்த
குழந்தைகள் விஷயத்தில் முக்கியச் செயலாற்றி வருகிறது.
மூச்சு நாற்றம் என்பது வெளிக்காணரங்களாலும்.
உள்காரணங்களாலும் ஏற்படுகிறது. சிதைவுற்ற பற்கள்,
சீழ்ப்பல் நோய் (பயோரியா) மற்றும் சீழ் சார்ந்த நோய்க்
காரணிகளால் வாய் நாற்றம் ஏற்படுகிறது. இந்நோய்களின்
காரணமாக ஏற்படும் இரசாயன மாறுபடுகளால் உருவாகும்
பாக்டீரியா போன்ற கிருமிகளாலும். இவ்வகையான வாய்
நாற்றம் உண்டாகிறது. இந்நோயைப் புறக்கணித்தால்,
திசுக்களும் எலும்புகளும் சேதமடையும் அபாய நிலை
ஏற்படுகிறது. வளர்ச்சி அடையாத நாடுகளில் சுத்தமற்ற
ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளாலும் உணவின் ஊட்டச்சாத்த்க
குறைபாட்டினாலும், இந்நிலை அதிகம் காணப்படுகிறது.
வாய்ப் புண்ணாலும், அழுகிய வாய் அழற்சியாலும் இவர்கள்
பாதிப்புக்கு ஆளாகிறார்கள். நல்ல வேளையாக, வளர்ச்சி
அடைந்த நாடுகளில் இந்நோய் அதிகம் காணப்படவில்லை.
இந்நோயின் ஆரம்ப அறிகுறிகள்: பல்லைச் சுற்றியுள்ள
தசைகளில் இரத்தம் கசிதல், வாய்ப் புண்ணாதல் மற்றும்
வாயில் ஏற்படும் ஒருவித துர்நாற்றம். ....தொடரும |