|
வாய் துர்நாற்றத்திற்கான பல காரணிகள்....2
தொண்டைப்புண் மற்றும் மூக்கின் அடியில் உள்ள தசையில்
ஏற்படும் புண் இவற்றால் கெட்ட நாற்றம் உருவாகி, வாயின்
வழியே வெளிவருகிறது. மூக்கின் உட்பகுதியில் ஏதேனும்
நோய்த் தொற்று ஏற்பட்டால், மூக்கின் வழியே கெட்ட
சுவாசம் வெளிவருகிறது. ஏப்பம், எதிர்க்களித்தல்
போன்றவைகளாலும் வாயில் துர்நாற்றம் வெளிப்படுகிறது.
பெண்களுக்குப் பிரசவத்தின்போதும், மாதவிடாய்க்
காலத்திலும் ஒருவித சுவாச வாடை ஏற்படுகிறது. செரிமானம்
இன்மை, வயிற்றுப்புண் போன்றவைகளால் தொண்டை வழியே
வெளிவரும் வாடை, வாய்வழியே வெளிவருகிறது. பொருந்தா
உணவுகளும் இத்தகைய மூச்சு நாற்றத்திற்குக் காரணமாக
அமைகிறது. மலச்சிக்கலால், செரித்த உணவு வெளியேற்றம்
தடைப்பட்டு நொதித்துப் போவதால், இரைப்பை மற்றும் குடல்
பகுதியில் ஒருவித இறுக்கம் ஏற்பட்டு, அதனால் ஒருவிதக்
கெட்ட நாற்றம் உண்டாகி கெட்ட சுவாசம் உண்டாகிறது.
..... தொடரும் |