|
வாய் துர்நாற்றத்திற்கான பல காரணிகள்...4
உடல் உறுப்பின் எந்தப் பகுதியிலாவது சீழ்க்கட்டு
ஏற்பட்டாலும், திசுக்கள் இறந்துபட்டு. காய்ச்சல்
ஏற்படுகிறது. அதனாலும் வாய் நாற்றம் ஏற்படுகிறது.
மனிதனுக்கு ஏற்படும் ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொரு
அறிகுறி உண்டு. சர்க்கரை வியாதி உள்ளவர்களிடம் தேன்,
ஆப்பிள் போன்ற இனிப்பு வாடைகள் ஏற்படும். இரத்த சோகை
(Anemia) வியாதி உள்ளவர்களின் மூச்சுக்காற்றில்,
சிறுநீரின் அம்மோனியா வாடை வெளிப்படும். சிறுநீரக
அழற்சி, வலிப்பு, அறிவுக் குழப்பம், முதுமை மறதி
(Dementia) போன்ற வியாதி உள்ளவர்களிடம் கூட ஒரு
குறிப்பிட்ட வாடை மூச்சுக்காற்றில் வெளிப்படுகிறது.
நாம் உண்ணும் பச்சைக் காய்கறிகளும், வாசனைப்
பொருள்களும், நீண்ட நேரம் நம் வாயினின்றும் ஒருவித
வாடையை வெளியேற்றுகின்றன. இலவங்கப்பட்டை, ஏலக்காய்,
மிளகு போன்றவை பொதுவாக நம் உணவில் சேர்க்கப்படும்
வாசனைப் பொருட்கள், பச்சைப்பூண்டு, வெங்காயம் போன்ற
உணவுப் பொருட்கள் ஒருவித வெறுப்பான வாடையை
ஏற்படுத்துகின்றன. சுருட்டு, பீடி, சிகரெட், புகையிலை
போன்றவற்றை உபயோகிப்பவர்களுக்கு பத்து முதல் 12
மணிநேரம் வரை அந்த வாடை வாயைவிட்டு அகலுவதில்லை. |