|
எளிதாகத் தொடங்கும் ஓர் ஆபத்து
நம் உடலின் உள் உறுப்புக்களில் மூலாதாரமாகத்
தோன்றும் மைய நோய் தொற்று, நம் ஆரோக்கியத்திற்கு ஓர்
அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இந்த மைய நோய்த்
தொற்று, இளம் வயதிலிருந்தே நம் உடலில் குடி
கொண்டிருக்கலாம். பின் நம் முழு உடல் பகுதிக்கும் இந்த
நோய்த் தொற்று பரவி, இதயம் மற்றும் நுரையீரல் பகுதிகளை
தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் பாதிப்படையச்
செய்யலாம். இந்த மைய நோய்த் தொற்று பற்றிய செயல்பாடுகள்
"ரோஸ் நவ்" (Rose Now) என்பவரால் 1919-ஆம் ஆண்டு
கண்டறியப்பட்டு, இன்றளவும் அதன் முக்கியத்துவம்
அதிகரித்துக் கொண்டே உள்ளது.
உடலைப் பாதிப்புக்குள்ளாக்குவதோடு, உடல்
வளர்ச்சியையும் இந்த மைய நோய்த் தொற்று பாதிப்படையச்
செய்கிறது. வலுவான சிறுவர்களையும்கூட, நிலையான இதய
அழற்சிக்கு உள்ளாக்கி, இதய உள்ளுறையில் கிருமிகளை
உண்டாக்குகிறது.
இந்தியாவில் சுமார் 70 சதவீத நோயாளிகள், இத்தகைய
மைய நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ
வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
.......தொடரும். |