|
எளிதாகத் தொடங்கும் ஓர் ஆபத்து....2
அறுவைச் சிகிச்சையின் வெற்றி என்பது சிகிச்சைக்கு
முன்னதாகவே, உடல் உறுப்பில் இருக்கும் சீழ்த் தொற்றினை
முற்றிலுமாக அகற்றி விடுவதில்தான் உள்ளது என
உணர்ந்துள்ளனர். அவ்வாறு அகற்றப்பட்டால்தான், அறுவைச்
சிகிச்சை செய்யும் பகுதிக்கு அந்த நோய்த் தொற்றுக்
கிருமிகள் பரவாமல் தடுக்கப்படும். எனவே நோயை முற்றிலும்
அகற்றுவதற்கும், ஆரோக்கியமான உடலைப் பெறுவதற்கும் இந்த
மைய நோய்த் தொற்றினைப் பற்றி நாம் அறிந்திருத்தல்
வேண்டும்.
மைய நோய்த் தொற்று (Focal Infection) என்றால் என்ன?
நம் உடலுக்குள் பாதிப்புக்குள்ளான நோயுற்ற பகுதி
ஏதேனும் இருந்தால், அந்தப் பகுதியிலிருந்து இரத்தத்தின்
மூலமோ, அல்லது நிணநீர் மூலமோ மற்றப் பகுதிகளுக்கும்
நோய் கிருமிகள் மெதுவாகப் பரவுவதோடு, ஆரோக்கியமான மற்ற
ஆதார தசைப் பகுதிகளையும் கடுமையாகத் தாக்குகிறது.
நோய்க் கிருமிகள் தங்கியுள்ள உறுப்பையே மையநோய்த்
தொற்று தங்கியுள்ள இடம் எனக் குறிப்பிடுகிறோம். ....தொடரும |