செம்மங்குடி..தொடர்-3
மாண்டலின் வந்ததில் எந்தத்
தப்பும் இல்லை. அது
கிட்டத்தட்ட ஃபிடில்
மாதிரிதான். சக்ஸஃபோன்
கேட்பதற்கு நன்றாக
இருக்கிறது, ஆனால்
மிகுந்த இரைச்சல். கல்யாண
வரவேற்பு போன்ற
நிகழ்ச்சிகளில்
வாசிக்கலாம். அவர் மிக
நன்றாகத்தான் வாசிக்கிறார்.
ஒரு குழுவை வைத்துக்
கொண்டு வெளுத்து
வாங்குகிறார்கள். அந்த
காலத்தில் கர்நாடக இசைக்கு
இவ்வளவு கூட்டம் வர
முடியாது. மைக்கு கிடையாது.
200, 300 பேர்இருந்தாலே,
பெரிய கூட்டம் என்று
நினைப்போம். சென்னையில்
சின்னச்சின்ன அரங்குகள்
இருந்தன. இப்போது
பிரம்மாண்டமான அரங்குகள்.
கலைஞர்களை பார்ப்பதற்கே
வெளிநாடு செல்லவேண்டும். |
செம்மங்குடி..தொடர்-2
பதில் தொடர்கிறது:
அவர் தேடிவைத்த
பாடல்களை எடுத்து
பங்கீடு செய்து
பிரச்சாரம்
செய்வதற்காக என்னை
அழைத்தார்கள்.
1940-லிருந்து
நான்
திருவனந்தபுரத்தில்தான்
இருந்தேன். அதற்கு
முன் கும்பகோணம்.
கும்பகோணத்திலிருந்து
18 மைல்
தொலைவில்தான்
எங்க ஊர்.
கும்பகோணத்திற்கு
முன்
திருவிடைமருதூரில்
குருகுலவாசம்.
முதன்முதலில்
கும்பகோணம்
நாகேஸ்வர சுவாமி
கோவிலில் பாடினேன்.
1977-ல் அகில
இந்திய காங்கிரஸ
மகாசபை சென்னையில்
கூடியது. அதில்
இசைக்கு என்று ஒரு
தனி பிரிவு
இருந்தது. அதில்
நான் பாடினேன்...
|