|
(1) தேவகி (சென்னை) கேள்வி: நிலையானது
எது?
பதில் : எல்லாமே நிலையற்றது என்பது
மட்டும்தான் நிலையானது.
(2) ராமன் (சென்னை)
கேள்வி : பால் விலை உயர்வை திரும்பப்
பெறவேண்டும் என்று அஇஅதிமுக-வும், தேமுதிக-வும்
கோரியுள்ளது பற்றி..?
பதில் : அஇஅதிமுக அரசு ஆண்டபோது உயர்த்தாத
விலையே இல்லை. தேமுதிக ஆட்சிக்கு வந்தாலும் விலை உயர்வை
தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் இப்போது
செய்வது கருணாநிதியாயிற்றே... அவர் உடைத்தால்
பொன்குடம்தான்.
(3) பத்ரி நாராயணன் (பாளையங்கோட்டை)
கேள்வி : நாய்க்கும், நரிக்கும் உள்ள
வித்தியாசம்..அரசியல் விளக்கம்.....?
பதில் : பதவிக்கு வர ஆசைப்படும்
அரசியல்வாதிக்கும், பதவிக்கு வந்துவிட்ட
அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசம்தான்.
குறிப்பு: உங்களுடைய கேள்வியும் இந்த
பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை
பெறுங்கள். |