|
(1) நிர்மல் (சென்னை)
கேள்வி: இவ்வளவு விளையாட்டுக்கள் இருக்க
அரசியலைச் சதுரஙகத்துடன் மட்டும் ஒப்பிடுவது ஏன்?
பதில்: இரண்டிலும் மன்னர் (அல்லது மந்திரி)
உண்டு, தந்திரம் உண்டு, சாணக்கியம் உண்டு, காயை
நகர்த்துவது உண்டு, இரண்டிலுமே பொது மக்களின் நலன்கள்
மட்டுமே புறக்கணிக்கப்படுகின்றன.
(2) கார்திக் (தில்லி)
கேள்வி: ஹெல்மெட் சட்டம் இப்போது எப்படி
உள்ளது?
பதில்: மாடு வந்தது, கட்டினால் கட்டு,
விட்டால் விடு.
(3) அன்பரசு (சான் ஃபிரான்சிஸ்கோ)
கேள்வி: எதுக்கு இந்த வம்பு என்று
எப்பொழுதெல்லாம் எண்ணுவீர்கள்?
பதில்: நாம் அறிவுரை கூற, அதனால்தான்
அனர்த்தம் விளைந்தது என்று அறிவுரை பெற்றவர்
எண்ணூம்போது.
(4) பொன்.தொரைசாமி (மதுரை)
கேள்வி: கவிஞர்கள் நடிகர்களாக மாறும் போக்கு
பற்றி?
பதில்: நாடகமே உலகம் என்னும் கூற்றில்
நம்பிக்கை உள்ளபோது அவர்களும் நடிக்கட்டுமே.
பிழைப்புக்காக கேமிராவுக்கு வெளியே நடிக்கத்தான்
செய்கிறார்கள். கேமிராவுக்கு முன்னாலும் நடிக்கட்டுமே.
குறிப்பு: உங்களுடைய கேள்வியும் இந்த
பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை
பெறுங்கள். |