|
(1) பெலிக்ஸ்(சென்னை)
கேள்வி: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
என்பதற்கு உதாரணம்?
பதில்: சென்னை பரங்கிமலையில் உணவுப்பொருள்
வழங்கு துறையின் அலுவலகத்தில் தமிழக உணவு அமைச்சர்
திடீர் சோதனை செய்தபோது நிர்வாகரலுவலர் தாமதமாக
வந்ததைக் கண்டுபிடித்தாராம். அனைத்து அலுவலகங்களிலும்
இது தான் கதி என்பதற்கு இதே சான்று!!
(2) லோஹி தாசன் (தில்லி)
கேள்வி: அரசியல் வாதியின் இலக்கணம் என்ன?
பதில்: கர்ணாடக முன்னாள் பா ஜ க முதல்வர்
எடியூரப்பா படகில் வந்து, ஒகனேகலுக்குச் சொந்தம்
கொண்டாடினார் அதே கட்சியின் தமிழகத் தலைவர் இல கணேசன்,
ஒகனேகல் திட்டத்தை நிறைவேற்ற பா ஜ க துணைநிற்கும் என்று
கூறியிருக்கிறாரே, அது தான்.
(3) மஹேந்திரன் (சானூசே)
கேள்வி: அந்தக்காலத்தில் இருந்த எளிய
வாழ்க்கைமுறை இனி திரும்பவே திரும்பாதா?
பதில்: ஏன் திரும்பாது? இப்போதே
கேடிலக்கிலும் டொயோட்டாவிலும் ஏறி வந்து காந்தீயம்
பேசவில்லையா?.
(4) ஜி கே (சென்னை)
கேள்வி: 2009 -ஆம் ஆண்டு நாடாளுமன்றத்
தேர்தலில் யார் கூட்டணி அமைப்பார்கள்? 1.
அதிமுக-மதிமுக-தேமுதிக-பா ஜ க 2. அதிமுக-காங்-தேமுதிக
3. அதிமுக- மதிமுக-பா ஜ க 4.அதிமுக்-மதிமுக(2006
சட்டப்பேரவைத் தேர்தலைப் போல). 4-ஆவதாகக் குறிப்பிட்ட
கூட்டணி ஏற்பட்டால், அவர்கள் ஒரு இடத்திலாவது
ஜெயிப்பார்களா?
பதில்: அனைத்துமே காங்கிரஸின்
முடிவைப்பொறுத்ததே. திமுக-வும் சரி, அதிமுகவும் சரி,
காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவே விரும்பும்.
காங்கிரஸுடன் கூட்டணி உள்ள கட்சியே வெற்றி பெறும்
என்பது என் அனுமானம். 4-ஆவதாகக் குறிப்பிட்ட கூட்டணி
போணியாவது சிரமமே!
குறிப்பு: உங்களுடைய கேள்வியும் இந்த
பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை
பெறுங்கள். |