|
1 ஷியாம்பிரகாஷ் (பாலவாக்கம், சென்னை). கேள்வி:
நிழலுக்கும் நிஜத்திற்கும் தற்போதைய அரசியல் உதாரணம்?
பதில்: மாநில அமைச்சரவையில்
இடம்பெறவேண்டும் என்ற
காங்கிரஸின் கனவு,நிரந்தர நிழல். மாநிலங்களவைக்கு
இரண்டு இடம்
பெற்றது, நிஜம்.
2 பூஜா பிரியதர்ஷினி (சோழிங்கநல்லூர்,
சென்னை)
கேள்வி: கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்....?
பதில்: நான்கு ஆண்டு மத்திய அரசுக்கு ஆதரவு
அளித்துவிட்டு
இப்போது
மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத்
தவறிவிட்டது
என்று
கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறுகின்றனவே....
3 ரோஹிந்த் (பெரியார்நகர், சென்னை)
கேள்வி: இப்போதைய கோடை மழை குறித்து உங்கள்
கருத்து?
பதில்: மனிதர்களைப் போலவே இயற்கையும் இப்போது
காலம்கெட்ட
காலத்தில் தனது பருவத்தை மாற்றிக் கொள்கிறது.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |