|
1 அமுதா (குரோம்பேட்டை, சென்னை) கேள்வி:
நமது இந்தியாவில் பல ஜாதிகள் இருக்கின்றன., அவற்றில்
எது முதன்மையானது. போற்றத்தக்கது..?
பதில்: ஜாதிகள் பிறப்பதற்கு
முன்பிருந்த சமூகமே முதன்மையானது. ஜாதி
இரண்மொழியவேறில்லை என்று நம்புவோரின் ஜாதியே
போற்றத்தக்கது.
2 பாலாஜி (சென்னை)
கேள்வி: பேசத் தெரிந்தவரெல்லாம்
புத்திசாலிகளா..? இல்லை நல்ல பேச்சாளரா..?
பதில்: பேச முடியாத, காது கேளாத, அதி
புத்திசாலிகளான மேதைகள் பலர் இருந்திருக்கிறார்கள்,
இருக்கிறார்கள்.
3 வெங்கட்சுப்பிரமணியம் (ஊட்டி)
கேள்வி: பத்திரிகையாளர்கள் அனைவரும்
உண்மையானவர்களா.?
பதில்: பத்திரிகையாளர்கள், வேறு
கோள்களிலிருந்து வந்து குதிப்பவர்கள் அல்ல. நமது
சமூகத்திலிருந்து தோன்றுபவர்களே. நமது சமூக பண்புகளின்
பிரதிபலிப்பு அவர்களிடமும் இருக்கத்தான் செய்யும்.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |