|
(1) நவநீத கிருஷ்ணன் (சென்னை). கேள்வி:
கேள்விகளுக்கு பதில் சொல்லும் தகுதி யாருக்கு உள்ளது?
விடை தெரிந்தவருக்கா..? விளக்கம் கொடுப்பவருக்கா..?
பதில்: கேள்வியை புரிந்து கொள்ளும்
தகுதி இருப்பவருக்குத்தான்.
(2)ஜெயஸ்ரீ (சென்னை)
கேள்வி: அரசியலில் ஆண்-பெண் வித்தியாசம்...?
பதில்: இந்திரா காந்தியை அப்போதைய
அமைச்சரவையின் ஒரே ஆண் மகன் என்று கூறுவார்கள்.
3. முருகானந்தம் (பழனி)
கேள்வி: அந்நிய நாட்டு பொருட்களின் இறக்குமதி
நல்லதா, உள்நாட்டு ஏற்றுமதி நல்லதா? இரண்டுமே தேவைதானா..?
பதில்: உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது.
நமது ஏற்றுமதி என்பது, இன்னொரு நாட்டின் இறக்குமதி.
அதேபோல இன்னொரு நாட்டின் ஏற்றுமதி நமது இறக்குமதி.
இரண்டையும் தவிர்க்க முடியாது.
4. தேசிகன் (கும்பகோணம்) கேள்வி:
நாள்காட்டி..................? பதில்:
குறைந்துவரும் நமது ஆயுளின் கைகாட்டி. குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |