|
(1)பூஜா (சோழிங்கநல்லூர், சென்னை) கேள்வி:
உண்மை பேசுபவர்கள் யார்?
பதில்: தனக்கு சேரவேண்டியதைத் தவிர
வேறு எதன் மீதும் ஆசை கொள்ளாதவர்கள்.
(2)ஷியாம் (பாலவாக்கம், சென்னை)
கேள்வி: இனி நடிகர்களாக இருப்போர்
முதலமைச்சர் இருக்கையை ஆக்கிரமிக்க வாய்ப்பு உள்ளதா?
பதில்: ஏன் இல்லை...? உலகமே ஒரு நாடக
அரங்குதானே...!
3. ரோஹிந்த் (சென்னை-82)
கேள்வி: கூவம் இனி ஆறாக மாறுமா?
பதில்: வெளியே எடுத்த டூத் பேஸ்ட்டை
திரும்பவும் உள்ளே புகுத்தினாலும் புகுத்தலாம்... ஆனால்,
கூவம் மட்டும் இன்னும் பெரிய கூவமாக மாறக்கூடுமேயொழிய,
நாம் நீராடும் ஆறாக மாறுவது நடக்காத காரியம்.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |