|
(1)பாக்யா (சென்னை) கேள்வி:
கேரளா(முல்லைபெரியாறு), கர்நாடகா(ஒகேனேக்கல்),
ஆந்திரா(கிருஷ்ணா), மத்தியிலோ (சேது சமுத்திரம்) ஏன்
இப்படி தமிழகம் நீரினால் இவ்வளவு அவதிப்படுகிறது?
பதில்: நீரினால் அல்ல. நீர் இல்லாததால்.
மற்ற மாநிலங்களைப் போல இயற்கை தமிழகத்திலிருந்து
உருவாகும் ஆறுகள் எதையும் வழங்கவில்லை. உருவாகும்
மாநிலம் உரிமை கொண்டாடுகிறது. எல்லோரும் இந்தியர்கள்,
எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வு ஏற்பட்டால் அன்றி,
அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையை வைத்து பிழைத்துக்
கொண்டேயிருப்பார்கள்.
(2)பாலாஜி (சென்னை)
கேள்வி: 'என்னைப் பார் யோகம் வரும்' (கழுதைப்
படம்) நம்பிக்கை உண்டா?
பதில்: கழுதைப் படத்திற்கு பதிலாக (கழுதையை
பார்க்கவேண்டும் என்று தோன்றும்போதெல்லாம்) நான்
என்னையே கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறேன்,
அதிர்ஷ்டமும் தானாக வருகிறது.
(3)முருகவேல் (சென்னை)
கேள்வி: மாங்காமடையன் என்றால் என்ன?
பதில்: மாங்கொட்டையின் அருகே
செல்லும்போதுதான் அந்த மாம்பழம் எவ்வளவு புளிக்கிறது
என்பது தெரியவரும் என்ற உண்மையை புரியாத புத்திசாலிகள்.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |