|
(1)ஷாஜன் (தில்லி) கேள்வி:
சாக்லெட்டின் மீது மக்களுக்கு ஏன் மோகம்? அப்படி
என்னதான் இருக்கிறது?
பதில்: நம்மிடம் வந்து ஒட்டிக்
கொள்கிறதே அதனால்தான்.
(2)பிரியா (சென்னை)
கேள்வி: அறை எண் 305-ல் கடவுள். உங்கள்
பக்கத்து அறையில் கடவுள் இருந்த அனுபவம் உண்டா?
பதில்: பக்கத்து அறையில் யார் இருக்கிறார்கள்
என்பதை நான் பார்ப்பதில்லை. என் உள்ளே அவர் இருப்பதை
நான் உணர்கிறேன்.
(3)வேதவல்லி (செங்கல்பட்டு)
கேள்வி: ஆறிலிருந்து அறுபதுவரை..........?
பதில்: நினைவு வருவது ஆறில். அரசு ஊழியராக
இருந்தால் ஓய்வு பெறுவது 60-ல். இல்லாவிடில்,
ஆறிலிருந்து காடுவரை.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |