|
1. பாலாஜி (சன்ஹைடெக், சென்னை)
கேள்வி : விவாகரத்துக்காக கோர்ட் படியேறும்
படித்தவர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். இதை
குறைப்பதற்கு என்ன வழி?
பதில் : இதை ஏன் குறைக்கவேண்டும்? அவர்களும்
சுதந்திரம் பெற்றுவிட்டு போகட்டுமே....
2. ரேவதி பாலாஜி (கோடம்பாக்கம், சென்னை))
கேள்வி : பெண் உரிமைக்காக போராடும் நிறைய
ஆண்கள் சமூகத்தில் உண்டு. ஆனால் ஆண் உரிமைக்காக
போராடும் பெண்கள் ஏன் ஒருவர் கூட இல்லை?
பின்குறிப்பு: ஆணின் உரிமைகள் சமுதாயத்தில்
பல இடங்களில் நசுக்கப்படுகின்றன ஆனால் அதற்காக குரல்
கொடுக்கும் ஒரேஒரு பெண்கூட இல்லை ஏன் இந்த அவலம்?
பதில் : பெண்களுக்கு அதிக உரிமை கொடுக்கும்
உரிமை மட்டும் ஆண்களிடம் எப்போதும் நிலைத்திருக்கும்.
3. வெண்பா (சென்னை)
கேள்வி : தொடாந்து இந்து மதம் குறிப்பிட்ட
சிலரால் தாக்கப்படுகிறது. இதை பல பத்திரிகைகள்
கண்டிப்பதில்லை அது ஏன்?
பதில் : இந்த மதம் தாக்கப்படுகிறது என்பதை
நான் ஒத்துக் கொள்ள முடியாது.
4. முருகவேல் (குரோம்பேட்டை, சென்னை)
கேள்வி : தசாவதாரமா, குசேலனா...?
பதில் : எதுவாக இருந்தால் என்ன தயாரிப்பாளர்
குபேரனாக வேண்டும் அவ்வளவுதானே..!
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.
|