|
1. ராஜா (பெங்களூர்)
கேள்வி : வியாபாரத்தனம் என்பது..?
பதில் : அப்பாவிகளை ஏமாற வைப்பது.., ஏமாற்றுவது..,
இன்னும் அப்பாவிகளை உருவாக்குவது. இதுதான்
வியாபாரத்தனம்.
2. ரவிபிரசாத் (திருநெல்வேலி)
கேள்வி : நமது இந்தியாவில் பல ஜாதிகள்
இருக்கின்றன., அவற்றில் எது முதன்மையானது.
போற்றத்தக்கது..?
பதில் : ஜாதிகள் பிறப்பதற்கு முன்பிருந்த
சமூகமே முதன்மையானது. ஜாதி இரண்டொழியவேறில்லை என்று
நம்புவோரின் ஜாதியே போற்றத்தக்கது.
3. வேல்முருகன் (சென்னை)
கேள்வி : இப்போதெல்லாம் கொடி இடை நடிகைகளை
அதிகம் பார்க்க முடிவதில்லையே ஏன்?
பதில் : மெல்லினத்திற்கும்,
வல்லினத்திற்கும்தான் அதிக கிராக்கி.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.
|