'வார்த்தைகள், வார்த்தைகள்,
வார்த்தைகள்:
ராஜதந்திரத்தின் சாகசங்கள்
1997 முதல் 2000 ஆம் ஆண்டு
வரையிலான பரபரப்பான
காலகட்டத்தில்
வாஷிங்டன்னில் நமது
தூதரகத்தில் துணை தூதராகப்
பணியாற்றியவர் டி. பி.
ஸ்ரீனிவாஸன். 1998 மே
மாதம் போக்ரான் அணுசோதனை
நடந்த பிறகு, நமக்கும்
அமெரிக்காவுக்குமான
உறவுகள், 1971-ஆம்
ஆண்டுக்குப்பிறகு, மிக
மோசமான நலையை எட்டியது.
நமது தூதரகம் - குறிப்பாக
ஸ்ரீனிவாஸன் -மேற்கொண்ட
முயற்சியாலும்,
அமேரிக்காவில் வாழும் நம்
நாட்டவரின் ஆதரவினாலும்,
அதோடு, கார்கிலில்
பாகிஸ்தான் செய்த
ஹிமாலயத்தவறினாலும்,
ஈராண்டுகளில் உறவு
சீரடைந்தது. 2000-ஆவது
ஆண்டு மார்ச் மாதம் அதிபர்
க்ளிண்டன் நமது நாட்டுக்கு
வருகை தந்தபோது
மறக்கமுடியாத அளவுக்கு
வரவேற்பு அளிக்கப்பட்டதும்
நினைவிருக்கலாம்....