|
நமீதா! பேரைக் கேட்டாலே மனசு பதறுதில்ல. ஆனால்
நமீதாவிடம் எந்த பதற்றமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல்
அமைதியாக பேசுகிறார். சிம்புவுடன் 'கெட்டவன்' படத்தில்
நடிக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார். பரபரப்பிற்கு
பேர்போன சென்னை நுங்கம்பாக்கத்தில் அந்த ஐந்து
நட்சத்திர ஹோட்டலில் நமிதாவை சந்தித்து
உரையாடியதிலிருந்து... உடம்பை சிக்கென்று
ஒல்லியாக்கும் முயற்சி ஏதாவது செய்கிறீர்களா?
நான்
சினிமாவில் நடிக்க வந்தபோதே 69 கிலோ இருந்தேன்.
விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் படத்தில் நடிக்கும்போது
கஷ்டப்பட்டு எட்டுகிலோ குறைத்தேன். தற்போது என்னுடைய
எடை 59 கிலோ. இதற்கு மேல் குறைந்தால் ரசிகர்கள் ஒப்புக்
கொள்ளமாட்டார்கள். உடல் எடையைக் குறைப்பதுதான் கஷ்டம்.
கூட்டுவது ரொம்ப ரொம்ப ஈஸி.
ஒரு பாடலுக்கு ஆடமாட்டேன் என்கிற விரதத்தை
எப்போது கைவிடப்போகிறீர்கள்?
ஒரு பாடலுக்கு ஆடுவதில்லை என்பதை தொடர்ந்து
கடைபிடித்து வருகிறேன். முதல்முதலாக என்னிடம்
சிம்புதான் 'மன்மதன்' படத்தில ஒரு பாட்டுக்கு
ஆடுவீர்களா என்றார். முடியாது என்றேன். அடுத்து 'வல்லவன்'
படத்தில் ஆட சொல்லி வற்புறுத்தினார். அஜீத்கூட ஒரு நாள்
பில்லா ஷுட்டிங்கில், நீங்கள் ஒரு பாட்டு ஆடமாட்டேன்
என்பதில் உறுதியாக இருப்பீர்களா என்றார். நிச்சயம்
இருப்பேன் என்றேன். ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட நான்
சம்மதித்திருந்தால் தற்போது 20 பாடல்களுக்கு என் ஆட்டம்
இருந்திருக்கும்.
சிம்புவுடன் நடிப்பது பற்றி?
'கெட்டவன்' படத்தில் சிம்புவுடன் நடிக்கிறேன்
என்றதும், பலர் என்னிடம் அவருடன் நடிக்கிறீர்களே,
பயமாக இல்லையா என்றார்கள். கெட்டவனில் சிம்புவுடன் நான்
ஒரு நடிகையாக நடிக்கிறேன். ஒவ்வொருத்தருக்கும் ஒரு
பர்சனல் லைஃப். குணங்கள் இருக்கும். அதை பற்றி நான்
என்றைக்கும் கவலைப்பட்டதில்லை. சிம்புவை பொறுத்தவரை
வெரிகுட் டெக்னீஷியன்.
முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்றீர்களாமே?
வழக்கமான 'முத்தக்காட்சி' என்றால் நடிக்க ரெடி.
அதேசமயம் சர்ச்சைக்குரிய ஒரு முத்தக்காட்சி என்றால்
நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன். இப்படிதான் சில
மாதங்களுக்கு முன் ஒரு பெண் இயக்குநர் இது மாதிரி
முத்தக்காட்சியுள்ள கதையை சொன்னார். நான் முடியவே
முடியாதென்று மறுத்துவிட்டேன். தற்போது அந்தப் படத்தில்
இந்தியில் பிரபலமாக உள்ள இரண்டு நடிகைகள்
நடிக்கிறார்கள்.
ஹாலிவுட் படம் 'மாயா' என்ன ஆச்சு?
'மாயா' படம் எப்போதோ முடிந்துவிட்டது. இன்டர்நேஷனல்
பிலிம் பெஸ்டிவல்களுக்கு மாயா படத்தை அனுப்பும்
முயற்சியில் உள்ளார்கள். இதுதவிர 'அமரன்', 'கோவில்பட்டி
வீரலட்சுமி' படங்களை டைரக்ட் செய்துள்ள கே ராஜேஷ்வரின்
டைரக்ஷனில் 'மல்லிகை மலரே' என்ற வித்தியாசமான படத்தில்
நடிக்கப்போகிறேன். மம்முட்டியுடன் ஒரு மலையாள படத்தில்
நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் என் கேரக்டருக்கு
முக்கியத்துவம் இல்லாததால் வேண்டாம் என்று
மறுத்துவிட்டேன்.
பில்லாவில் உங்களைவிட நயன்தாராவிற்கு தானே அதிக
முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்?
கண்டிப்பாக இதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்.
பில்லாவின் முழு ஸ்கிரிப்ட்டையும் என்னிடம்
விஷ்ணுவர்த்தன் கொடுத்தார். அதை பார்த்த பிறகுதான் என்
கேரக்டரின் முக்கியத்துவம் தெரிந்தது. ஸோ, உடனடியாக
நடிக்க ஒப்புக் கொண்டேன். பழைய பில்லாவில் பிரமிளா
நடித்திருந்த கேரக்டர்தான் எனக்கு. இதில் யாருக்கு
அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பது
ரசிகர்களுக்கு தெரியும்.
நடிகைகள்
இப்போதெல்லாம் தைரியமாக வயதை சொல்கிறார்கள். நீங்கள்
மட்டும் ஏன் பயப்படுகிறீர்கள்?
உண்மையில் எனக்கு வயதை சொல்ல தைரியம் கிடையாதுதான்.
அதேசமயம் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. கனவு
தேவதைகளுக்கு வயதே கிடையாது என்பதுதான் அது. ஸோ நமீதா
என்கிற இந்த கனவு தேவதைக்கு வயதே இல்லை என்பது என்
ரசிகர்களுக்கு தெரியும்.
ரசிகர்மன்ற பணிகள் எப்படியிருக்கிறது?
என் ரசிகர் மன்ற வேலைகள் ஜரூராக நடந்து
கொண்டிருக்கிறது. ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக
உள்ளார்கள். எனக்கே ஆச்சரியமாக உள்ளது. மாதத்திற்கு ஒரு
நாள் கொஞ்சம் கொஞ்சம் பேரை சந்தித்து பேச வேண்டும்
என்ற ஐடியா உள்ளது. பார்ப்போம். |