|
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் முன்னணி வரிசையில்
முதலிடத்தில் நிற்கவேண்டும் இதுதான் ஜெனீலியாவின்
நீண்டநாள் ஆசை. சந்தோஷ் சுப்பிரமணியத்தின் வெற்றியை
கொண்டாட ச்னனை வந்திருந்த அவரிடம் பேசியபோது தெரிந்து
கொண்டது, திடீரென்று வருகிறீர்கள் பிறகு காணாமல்
போகிறீர்கள் என்ன காரணம்?
'பாய்ஸ்'
படத்தின் மூலம் தமிழுக்குள் எண்ட்ரியானேன். ஆல்ரெடி
நான் தெலுங்கில் நடித்து கொண்டிருந்த இரண்டுப் படங்கள்
ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், பாய்ஸிற்கு
பிறகு வந்த நிறைய வாய்ப்புகளை இழக்க வேண்டியதாயிற்று.
காரணம் தெலுங்கில் பிஸியாகிவிட்டேன். அதன் பிறகு
விஜய்யுடன் சச்சின் நடித்தேன். படம் சரியாக போகவில்லை.
மீண்டும் என்னுடைய இருப்பிடம் ஹைதராபாத் என்று
முடிவாகிவிட்டது. தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற
பொம்மரிலு படத்தை தமிழில் சந்தோஷ் சுப்ரமணியமாக ரீமேக்
செய்தார்கள். பொம்மரிலுவில் நான்தான் கதாநாயகி.
தமிழிலும் நீங்கள்தான் நடிக்கவேண்டும் என்று டைரக்டர்
ராஜா விருப்பப்பட்டார். நடித்தேன். இன்று படம் நன்றாக
ஓடிக் கொண்டிருக்கிறது. ஸோ, இதற்கு முன் நான்
திடீரென்று வந்து வந்து காணாமல் போயிருக்கலாம். இனி
சென்னையில் தங்கி நிறைய தமிழ்ப் படங்களில் நடிப்பேன்.
இங்குள்ள தியேட்டர்களுக்கு போய் வந்தீர்களா?
சென்னையில் இரண்டு தியேட்டரில் ரசிகர்களோடு
உட்கார்ந்து படம் பார்த்தேன். முதலில் ஒரு சிலரை தவிர
மற்றவர்கள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. படம் முடிந்து
வெளியே வந்ததும், படத்தில் என்னுடைய கேரக்டர் பெயரான
ஹாசினியை சொல்லி சொல்லி அனைவரம் கூப்பிட
ஆரம்பித்துவிட்டார்கள். ஜெனிலியா என்பதைவிட ஹாசினி
என்ற அந்த கேரக்டர் அவர்கள் மனதில் பதியகாரணம் டைரக்டர்
ராஜாதான் அவருக்கு என்னுடைய ஸ்பெஷல் தேங்ஸ்.
விஜய் - ஜெயம்ரவி யார் நன்றாக நடிக்கிறார்கள்?
(அலறியபடி) அய்யோ இது என்ன இப்படியொரு கேள்வி.
இருவருமே ஸ்பீடாக நடிக்கக்கூடியவர்கள். விஜய் காமெடி
கலந்த ஆக்ஷனை வெளிப்படுத்துவார். ஜெயம்ரவி ரொமான்ஸ்
கலந்த ஆக்ஷன் செய்வார். இரண்டு பேரையும் பொருத்தி
பார்க்க தெரியவில்லை. இன்னும் அவர்களுடன் இரண்டு,
மூன்று படங்களில் நடித்தால் யார் நன்றாக நடிக்கிறார்கள்
என்பதை சரியாக சொல்வேன்.
நீங்கள் அதிக சம்பளம் கேட்கிறீர்களாமே?
யார் சொன்னது? சந்தோஷ் சுப்ரமணியம்
படத்தாயரிப்பாளரிடம் கேட்டுப் பாருங்கள். உண்மை
தெரியும். தெலுங்கில் நான் வாங்கும் சம்பளம் குறைவானது.
தமிழில் இப்போதுதான் பரபரப்பாக வளர்ந்து வருகிறேன்.
அதற்குள் அதிக சம்பளம் கேட்டால் என்ன ஆகும்?
எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களே அதன்
ரகசியம் என்ன?
ஒரு ரகசியமும் இல்லை. எதற்காக நான்
வருத்தப்படவேண்டும். நான் எதையும் மனதில் வைத்துக்
கொள்வதில்லை. அதுவேண்டும், அல்லது வேண்டாம் என்பதை
நேரடியாக சொல்லிவிடுவேன். மற்றபடி மறைத்து பேசுவது, ஓடி
ஒளிவது இதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்காது.
சுருக்கமாக சொன்னால் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில்
வரும் ஹாசினி கேரக்டரில் பாதி அப்படியே நான்தான். மனதை
வெற்றிடமாக வைத்துக் கொண்டால் மகிழ்ச்சி
நிறைந்திருக்கும்.
தமிழ் எப்போது கற்றுக் கொள்ள போகிறீர்கள்?
உண்மையில் எனக்கு தமிழில் பேசினால் புரியும். ஆனால்
என்னால் பதிலுக்கு தமிழ் பேச தெரியாது. அப்படியும் மீறி
நான் பேசினால் ஏதாவது வார்த்தைகளால் விபரீதம்
ஏற்பட்டுவிடும். தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தவுடன்
விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன்.
உங்களை நிறைய பேர் செக்ஸியாக இருப்பதாக
சொல்கிறார்களே உண்மையா?
தெலுங்கு பத்திரிகைகளில் என்னை செக்ஸியாக இருப்பதாக
எழுதுவார்கள். சிலபேர் நேரடியாக கேட்பார்கள்.
உண்மையிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான்
பார்ப்பதற்கு கண்டிப்பாக வல்கராக இருக்கமாட்டேன்.
அதுபோல் வல்கராகவும் நடிக்க மாட்டேன். இதுமாதிரி என்னை
பாராட்ட பாராட்ட மகிழ்ச்சி அதிகமாகிறது. என்னை செக்ஸி
என்று சொன்னால், சொன்ன அனைவருக்கும் நன்றி.
|