நதி பார்க்க அழகாகத் தோன்றும், மெளனமாய் தெரியும். ஆழத்தையும் சோகத்தையும் கணிக்க முடியாது. அதன் உள்ளே ஒளிந்திருக்கும் சுழற்சி வெளியே தெரியாது. காதலுக்கும் இதே குணங்கள்தான். இரண்டுமே ஆளை கரை சேர்ப்பதும் உணடு. அப்படியே விழுங்கி உயிர் போக்குவதும் உண்டு.
இப்படி நதிக்கும் காதலுக்கும் எண்ணற்ற ஒற்றுமைகள் உண்டு. இப்படி நதிபோல அமைந்து காதலர்களின் கதையைச் சொல்லும் படம்தான் மாஸ்கோவின் காவிரி என்கிறார் இதன் டைரக்டர் ரவிவர்மன்.
ரஷ்யாவில் மாஸ்கோவா நதியின் கரையில் இருப்பதால் அந்த நகருக்கு மாஸ்கோ என்று பெயர் வந்தது.
அந்த மாஸ்கோ நதி ஆழமானது, குளிர்ச்சியானது, அமைதியானது, காவிரி நதி சூடானது, ஆரவாரமானது பல பிரச்சினைகளைக் கொண்டது.
இப்படி மாஸ்கோவாக காவிரியாக இருவேறு முரண்பட்ட குணம் கொண்டவர்கள் காதலர்களாகிவிட்டால் அவர்கள் ஒன்று சேர முடியுமா, முடியாதா என்பதுதான் மாஸ்கோவின் காவிரி கதையாம்.
தசாவதாரம் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார் ரவிவர்மன். தான் ஒரு இயக்குநராக வேண்டும் என்கிற எண்ணத்தை அறிந்து தனக்கு ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்திலேயே வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் வி ரவிச்சந்திரனை, தன்னால் மறக்கவே முடியாது என்றார் ரவிவர்மா.
ஹர்ஷவர்தன், ராகுல் ரவீந்தரன், சமந்தா இம்மூவரையும் வைத்துத்தான் இக்கதை உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறதாம்.
செ.பா
|