சலங்கை துரை இயக்கத்தில் கரண், விதிஷா, ராதா நடிக்கும் படம் காத்தவராயன். காட்டுப் பகுதியில் சாராயம் காய்ச்சும் வியாபாரியாக வருகிறார் கரண். எனவே, வீரப்பன் காட்டுப் பகுதியில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். கந்துவட்டி கருப்பு என்ற காமெடி பாத்திரத்தில் வடிவேலு கலக்குகிறார். அதாவது வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு, அதை திரும்ப பெற முடியாமல் தவிக்கிற காமெடி கேரக்டராம் அவருக்கு.
மலேசியாவில் பாடல் காட்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கேமரா அங்குள்ள ஆற்றில் விழுந்துவிட, சென்னையிலிருந்து புது கேமராவை வரவழைத்து படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி உள்ளார்கள். ஆற்றில் விழுந்த கேமராவை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டு கொண்டு வந்து விட்டார்களாம்.
செ.பா
|