தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  Tamil
 in
   
 
 
 
 
 
மனதை புண்படுத்தாத காட்சி!

டம் பூஜை போட்ட அன்றே பெரும் சர்ச்சைக்குள்ளான 'வணக்கம்மா' படத்தின் இயக்குநர் எஸ் என் அரிராமை சந்தித்தபோது அவர் கூறியதாவது,

தென்னவன் கலைக்கூடம் என்ற பட நிறுவனம் சார்பில் அன்பு தென்னரசு தயாரிக்கும் படம் 'வணக்கம்மா'. இப்படத்தில் சரவணன், விஷணுபிரியன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க இன்னொரு நாயகனாக பரதன் நடிக்கிறார்.

சரவணன், விஷ்ணுபிரியன் இருவரும் ஆறு வயதில் ஒரு கொலை செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்படுகிறார்கள்.. அங்கும் ஒரு கொலையை செய்துவிட்டு சென்னைக்கு தப்பி வருகிறார்கள். சென்னை வாழ்க்கை அவர்களுக்கு விசித்திரமாக இருக்கிறது. பக்கத்து வீட்டில் எது நடந்தாலும் கதவை சாத்திக் கொள்கிற நகர மக்களின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அதன்படி பகலில் ராமர், கிருஷ்ணன், அனுமார் போன்ற கடவுள்களின் கெட்டப்பில் சென்று வீடுகளை நோட்டமிட்டு வந்து .இரவில் கொள்ளையடிக்கிறார்கள்.

இந்த காட்சியை மையமாக வைத்து சரவணனும், விஷ்ணுபிரியனும் ராமர், ஆஞ்சநேயர் கெட்டப்பில் இருப்பது போல 'வணக்கம்மா' படத்தின் துவக்க விழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டன. இது பலத்த சர்சசையை கிளப்பியதால் பூஜையே நிறுத்தப்பட்டது

யாருடைய மனதையும் புணபடுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் இப்போது வணக்கம்மா படத்தின் காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி கொள்ளையடிக்கும் வீடுகளை கடவுள் வேஷத்தில் சென்று நோட்டமமமிடுகிறார்கள் என்பதை மாற்றி பூம் பூம் மாட்டுக்காரர்கள் வேஷத்தில் செல்வது போல மாற்றப்பட்டுள்ளது என்றார் இயக்குநர் எஸ் என் அரிராம்.

செ.பா

மேலும் June 9th, 2008

Previous:    கந்துவட்டி கருப்பு!


மேலும்
Flowers - Many Congratulations R

Online Homeopathy Consulting!
BSE/NSE Live
Horoscope with 10 Year's Prediction
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy