தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  Tamil
 in
   
 
 
 
 
 
மீண்டும் கோவை தம்பி!

யணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், உதயகீதம், உயிரே உனக்காக, செம்பருத்தி போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மதர்லர்லேண்டு பிக்சர்ஸ் கோவை தம்பி, மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ளார். அஜீத்தின் மைத்துனரும், ஷாலினியின் அண்ணனுமான ரிச்சர்ட் ஹீரோவாக நடிக்க, வட்டாரம், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் நடித்துள்ள கீரத் ஹீரோயினியாக நடிக்கும் இப்படத்தின் பெயர் 'ஏன் இப்படி மயக்கினாய்'. சூர்யா-ஜோதிகாவை வைதது ஜில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணாதான் மேற்சொன்ன படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

படத்தைப் பற்றி அவர் என்ன சொல்கிறார்.....

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான ஹிப்-ஹப் நடனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன்.

இதற்காக நடிகர் ரிச்சர்ட் அமெரிக்கா சென்று சிறப்புப் பயிற்சி பெற்று வந்துள்ளார். வழக்கமான கதைகளிலிருந்து மாறுபட்ட கோணத்தில் படமாக்கவுள்ளோம். என்னுடைய முதல் படமான ஜில்லுனு ஒரு காதலுக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்தார். இப்படத்திற்கு சி இ சத்யா என்ற புது இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறோம். சினிமா வாசனையே தெரியாத பெங்களுரைச் சேர்ந்த காயத்ரி என்பவரை இரண்டாவது நாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளோம். பெங்களூர், ஊட்டி, சென்னை மற்றும் நியூசிலாந்தில் படப்பிடிப்பை நடத்த உள்ளோம். இந்த ஆண்டு இறுதியில் இப்படம் திரைக்கு வரவுள்ளது என்றார் இயக்குநர் கிருஷ்ணா.

செ.பா

மேலும் June 10th, 2008

Previous:    கந்துவட்டி கருப்பு!


மேலும்
Flowers - Many Congratulations R

Online Homeopathy Consulting!
BSE/NSE Live
Horoscope with 10 Year's Prediction
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy