ஸ்ருதி கமல் ஹாசன் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். தமிழில் அல்ல. ஹிந்தியில். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ருதியின் திரையுலகப் பிரவேசம் அவரது அம்மா சரிகாவைப் போலவே பாலிவுட்டில் நிகழ்கிறது.
ஸ்ருதி தமிழில் அறிமுகமாகிறார் என்றும் மாதவனுடன் ஜோடி சேருவார் என்றும் 'எவனோ ஒருவன்' படத்தை இயக்கிய நிஷிகாந்த் இப்படத்தை இயக்குவார் என்று போன மாதம் ஒரு செய்தி வந்தது. ஆனால் இப்படம் திடீரென்று கைவிடப்பட்டது. கமல் மகளின் பிரவேசம் இப்படி ஆகிவிட்டதே என்று கவலைப்பட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக வடக்கிலிருந்து அறிமுகம் ஆகிறார் ஸ்ருதி. இதன் மூலம் எடுத்த எடுப்பிலேயே அகில இந்திய ஸ்டார் ஆகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.
ஷாருக்கான், கரண் ஜோஹர் இணைந்து தயாரித்த கால் படத்தை இயக்கிய சோஹம் என்பவர்தான் ஸ்ருதியை அறிமுகப்படுத்தவிருக்கும் இயக்குனர். அனில் கபூர் நடிக்கும் இந்தப் படத்தில் மற்றொரு ஹீரோவான இம்ரான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறாராம் ஸ்ருதி. இந்த இம்ரான், அமீர் கானின் உறவினர்.
ஏக் துஜே கேலியே என்னும் மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தாலும் இந்தியில் கமலால் பெரிய நட்சத்திரமாக உருவெடுக்க முடியவில்லை. அவரது மகள் அப்படி உருவெடுப்பாரா என்று பார்க்கலாம்.
|