டைட்டில் விஷயத்தில் முதன்முறையாக ஒரு படத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தெய்வ மகன் என்ற படத்தின் தலைப்பை இப்போது வேறொரு படத்திற்கு சூட்டியிருக்கிறார்கள். இதன் படத் துவக்க விழாவும் நடந்து முடிந்திருக்கிறது.
படத்தின் ஹீரேத கிருஷ்ணா, தயாரிப்பாளரின் இளைய மகன். இவரது அண்ணன்தான் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். இருவரையும் பார்க்க ஒருவர் போலவே இருப்பதாகப் பலர் கிசுகிசுத்தார்கள். ஆர்யா பேசும்போது, ரெதம்ப நாளாகவே விஷ்ணுவுக்குத் தான் ஹீரோ ஆகணும்ங்கிற ஆசை இருந்தது. ஆனால் எப்படியிருக்குமோ என்ற பயமும் இருந்தது. கிருஷ்ணாவை ஸ்கிரீனில் பார்த்தபின் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பார் என்றார். பின்னாலேயே பேச வந்த பரத், இருவரும் சேர்ந்து இரட்டை வேடக் காட்சிகளில் நடிக்கலாம் என்றார்.
 இப்படி இருவரும் மாற்றி மாற்றி விஷ்ணுவை நடிக்கத் தூண்டிவிட்டுக் கொண்டேயிருக்க, தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் அன்பாலயா பிரபாகரனின் பார்வை வேறு மாதிரி இருந்தது. சமீபத்தில் நான் எடுத்த பழனியப்பா கல்லூரி படத்தில் நடித்த புதுமுகம் ஒருவர் அஜீத் சாயலிலேயே இருந்தார். அதனால்தான் அந்தப் படம் தோல்வியடைந்தது. கிருஷ்ணா மாதிரியே விஷ்ணுவர்த்தன் இருப்பதால் இனி கிருஷ்ணா படங்கள் மட்டுமே ஓடும். விஷ்ணுவர்த்தன் நடித்தால் கிருஷ்ணா போலிருக்கிறார் என்று சொல்வார்களே தவிர, ஓட வைக்க மாட்டார்கள் என்றார்.
இதைக் கேட்டு பரத்தும், ஆர்யாவும் விஷ்ணுவர்த்தனை பார்த்துக் கிண்டல் அடிக்க, மேடை என்பதையும் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்கள் முவரும்.
|