தசாவதாரம் படம் நாளைக்கு (ஜூன் 13) ரிலீஸ் ஆகிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டிருக்கிறது. அதை கலைஞர் டி.வி வாங்கியிருக்கிறது. விலை எவ்வளவு தெரியுமா? 5.1 கோடியாம்.
என்.எஸ்.சி ஏரியாவில் மட்டும் எண்பது பிரிண்டுகள் போடப்பட்டிருக்கிறதாம். செலவு செய்த பணத்தை ஒரே வாரத்தில் எடுத்துவிடுகிற அளவுக்கு இப்படியெல்லாம் திட்டமிடுகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். அதன் இன்னொரு திருப்பமாக இப்படத்தின் டி.வி.டியையும் விரைவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறாராம். அதிகாரபூர்வமாக டி.வி.டி வெளி வரும்போது திருட்டு வி.சி.டி குறையும் என்பது அவரது கணக்கு. கோலிவுட் வட்டாரங்கள் சொல்வதைப் பார்த்தால், படம் ரிலீஸ் ஆகி 50 நாட்களுக்குள்ளேயே அதிகாரபூர்வ டி.வி.டி வந்துவிடும் போலிருக்கிறது. நல்லதுதானே?
|