ஒரு வழியாக ஸ்ரீகாந்த் நடித்த சதுரங்கம் படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு தயாரான இப்படம் வெவ்வேறு காரணங்களால் பெட்டியிலேயே முடங்கிவிட்டது. ஸ்ரீகாந்துடன் சோனியா அகர்வால் ஜோடியாக நடித்திருந்தார். கரு. பழனியப்பன் இயக்கியிருந்த இப்படத்திற்கு மாநில விருதும் கிடைத்திருந்தது.
இப்படம் வெளிவந்தால் தனக்கு மார்க்கெட் ஏறிவிடும் என்ற முடிவில், தானே முன்னின்று முயற்சித்த ஸ்ரீகாந்த், ஒருகட்டத்தில் சோர்ந்துபோய் விலகிவிட்டார். தமிழில் தொடங்கப்படவிருக்கும் முக்கிய சேனல் ஒன்று இப்போது இந்தப் படத்தை வாங்கியிருக்கிறது. ரிலீஸ் வேலைகளையும் இவர்களே பார்க்கப் போகிறார்களாம். மொத்தமாக மூன்று கோடி
கொடுக்கப் போகிறார்களாம்.
சதுரங்கத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, சூர்யா நடிக்கும் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ். துரைராஜ்.21;கடமும் வந்திருக்கிறது லிங்குவுக்கு. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜயன்ட் முவீஸ் லிங்குசாமிக்குக் கொடுத்திருந்த அட்வான்ஸ் பணத்தைத் திருப்பி வாங்கிவிட்டார்களாம்.
|