கலைஞர் டி.வி.யில் முக்கியப் பொறுப்பிலும் இருக்கிறார் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம. நாராயணன். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இம்முறை போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தவர், வேறு யாருக்காவது இந்த பதவியை விட்டுக் கொடுக்கிறேன் என்றாராம்.
ஆனாலும், அவர் மேல் அன்பு கொண்ட சுமார் 400 தயாரிப்பாளர்கள் இவரே தலைவராக வேண்டும் என்று கையெழுத்திட்டு ஒப்புதல் எழுதிக் கொடுத்தார்களாம். இதையடுத்து, பல தயாரிப்பாளர்களின் வற்புறுத்தல்களை ஏற்று, தேர்தலில் நிற்கும் முடிவை எடுத்திருக்கிறார் இவர். இம்முறை இவரது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருக்கிற திட்டங்களில் முக்கியமானது, தயாரிப்பாளர்களின் குடும்பங்கள் இலவசமாகத் திருமணங்கள் நடத்திக்கொள்ள வசதியாக ஒரு மண்டபத்தைக் கட்டுவது என்பதுதான்.
இந்தக் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவிக்கவில்லையென்றாலும் இராம. நாராயணன்தான் வெற்றி பெறுவார் என்கிறது கோலிவுட் தயாரிப்பாளர் வட்டாரம்.
|