மீரா ஜாஸ்மினுக்குக் கதை சொல்வதென்றால் கொச்சினுக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் இயக்குனர்கள். அதிலும் கதையைக் கேட்டு பிடித்திருந்தால் மட்டுமே கால்ஷீட் என்றிருந்தவர், இப்போது கொஞ்சம் இளகியிருக்கிறார். கதை விஷயத்தில் கறார் கொள்கையை விட்டுவிட்டாராம். தெய்வ மகன் என்ற படத்தில் ஒரு புது முகத்துடன் ஜோடி சேரவும் சம்மதித்திருக்கிறார். எங்கள் ஆசான் படத்திற்குப் பிறகு பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கும் படத்திலும் மீரா ஜாஸ்மினைத்தான் ஹீரோயின் ஆக்கியிருக்கிறார்கள்.
இப்படி இழுத்த இழுப்புக்கெல்லாம் மீரா வளைவதற்குக் காரணம், அடுத்த ஆண்டில் திருமணம் செய்துகொள்ளப்போவதுதான். அதற்குள் முடிந்தவரை அறுவடை செய்துகொள்ளலாமே என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம்.
|