சிம்புவுக்கும், ஒளிப்பதிவாளர் சரவணனுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் சரவணன் இயக்கிவரும் சிலம்பாட்டம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் கசிந்தது கோடம்பாக்கத்தில். விசாரித்தால், அப்படியெல்லாம் எதுவுமில்லையாம். இதுவரை 75 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. இன்னும் 35 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறதாம்.
ஒளிப்பதிவாளர் என்றாலும், தனது உதவியாளர் மதியை வைத்துதான் இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார் சரவணன். இருவரும் ஆலோசனை செய்து ஒளிப்பதிவில் புது யுக்திகளைக் கடைபிடிப்பதால் படப்பிடிப்பு தாமதாமாகிறது என்கிறார்கள்.
இப்படத்தை முடித்துவிட்டுக் கெட்டவனைத் துவங்கும் சிம்பு, அதன்பின் பாடகர் எஸ்.பி.பி.யின் மகன் சரண் இயக்கும் படத்தில் நடிக்கிறாராம். சென்னை 28 படத்தின் தயாரிப்பாளர் சரண்தான் என்பதும், தனக்குத் இயக்க தெரிந்திருந்தும் நண்பன் வெங்கட் பிரபுவை அப்படத்தை இயக்கச் செய்தார் என்பதும் மக்களுக்குத் தெரிந்த விஷயம்தானே!
|