மனைவியைப் பிரிய சட்டபூர்வமான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் பிரகாஷ் ராஜ். இதுபற்றி அறிந்ததும், ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு வந்து பிரகாஷ் ராஜைப் பிடிபிடியென்று பிடித்துவிட்டாராம் டிஸ்கோ சாந்தி. இவர் லலித குமாரியின் அக்கா.
தற்போது தெலுங்குப் படவுலகம் பிரகாஷ் ராஜுக்கு ரெட் போட்டதற்கும் டிஸ்கோ சாந்தியின் கணவருக்கும் சம்பந்தம் இருக்கிறதாம். அங்குள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய நபராக இருக்கிறார் சாந்தியின் கணவர். பிரகாஷ் ராஜை அடக்கி வைக்க வேண்டும் என்பதற்காக எடுத்த முடிவு, வேறு மாதிரியான விளைவுகளை உண்டாக்கி விட்டதே என்று கவலைப்படும் டிஸ்கோ சாந்தி இருவருக்கும் இடையே நிலவிவரும் கருத்து வேறுபாட்டை மிரட்டியாவது சரி செய்து விட வேண்டும் என்று நினைக்கிறாராம். வில்லனுக்கே வில்லியா?
இது போதாதென்று, செக் மோசடி வழக்கு ஒன்றில் இவர் ஆஜராகாததால் இவருக்கு பெயிலில் வர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்திருக்கிறது ராஜமுந்திரி நீதிமன்றம். பட்ட காலிலேயே படும் என்பது இதுதானோ.
|