தான் பதிவு செய்திருந்த வில் படத்தின் தலைப்பை தானே முன்வந்து பிரபு தேவாவுக்குக் கொடுத்திருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. தற்போது ஆந்திராவில் முகாமிட்டிருக்கும் அவர், தனது புலி படத்தைத் துவங்கிவிட்டார். இதில் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இரட்டை வேடக் கதை இது.
தமிழில் விஜய்க்காகத் தயாரான இந்தக் கதை வேறு சில காரணங்களால் கைவிடப்பட்டது. தெலுங்கில் ஹிட் கொடுத்துவிட்டு இதே கதையைத் தமிழில் எடுக்கிறார் சூர்யா. இதில் இவரே ஹீரோவாக நடிப்பாராம். தமிழில் இவர் இயக்கிய வாலி, இங்கே ஹிட் என்றதும் தெலுங்கு, ஹிந்தி என்று ஒரு ரவுண்ட் வந்தது. அங்கேயும் இவரே அப்படங்களை இயக்கினார். இப்போது உல்டாவாகத் தெலுங்கில் இருந்து துவங்குகிறார். மறுபடியும் மார்க்கெட்டைப் பிடித்தால் சந்தோஷம்தானே.
இதற்கிடையில் நியூட்டனின் 3ஆம் விதி படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்தின் காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துவருகிறார் சூர்யா. படப்பிடிப்பில் இவரைத் துரத்தி வந்த கார் ஒன்று இவரது பைக்கின் மீது மோதியதில் தூக்கி எறியப்பட்டுக் கீழே விழுந்தார் சூர்யா. பலமான அடி இல்லை என்றாலும் 15 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்களாம்.990;ோசடி வழக்கு ஒன்றில் இவர் ஆஜராகாததால் இவருக்கு பெயிலில் வர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்திருக்கிறது ராஜமுந்திரி நீதிமன்றம். பட்ட காலிலேயே படும் என்பது இதுதானோ.
|