 சென்னை(டிஎன்எஸ்) கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் திருமணம் இம்மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது. மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த திருமணத்திற்கு பல்வேறு பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் வரவிருக்கிறார்கள். ஆனால் அத்தனை பேரின் எதிர்பார்ப்பும் ஒருவர் மீதுதான் குவிந்திருக்கிறது. வருவாரா, மாட்டாரா?
இப்படி ஆர்வத்தேதடு எதிர்பார்க்க வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. இருவரும் பிரிந்து பல வருடங்கள் ஆனாலும் இதுபோன்ற விழாக்கள் இருவரையும் இணைத்து வைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில் இளையராஜாவுக்கு அழைப்பு வைக்க வைரமுத்து செல்லாமல், மணமகனே அழைப்பிதழ் எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் இருக்கின்றன.
ராஜா வருவாரா? அல்லது தனது வாரிசுகளை அனுப்பிவிட்டு வீட்டில் இருந்தபடியே வாழ்த்துவாரா? இன்னும் சிறிது நாட்களில் தெரிந்துவிடும். (டிஎன்எஸ்)
|