ஜுலை 1-ந் தேதி வரை கெடு கொடுத்திருக்கிறார் கார்த்தீகை படத்தின் இயக்குனர் வீரா. அதற்குள் மாளவிகா வந்து நடித்துக் கொடுக்காவிட்டால், அவர் மீது 75 லட்ச ருபாய் கேட்டு வழக்குத் தொடருவோம் என்று அறிவித்திருக்கிறார். இதுவரை நடித்த 15 நாட்கள் செலவையும் இப்போது அவர் வருவார் என்று நினைத்து போடப்பட்ட செட்டுகளுக்கான இழப்பையும் சேர்த்துத்தான் இந்தத் தொகையாம். இதற்கு எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை மாளவிகா.
இதற்கிடையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பிசியில் தலைவர் இராம.நாராயணன் இருப்பதால், இந்தப் புகார் குறித்து விசாரணையும் உடனடியாக நடக்கவில்லை. கடைசியில் கோர்ட்தான் வழி என்று நினைத்திருக்கும் தயாரிப்பாளருக்கு ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள் சில முக்கியஸ்தர்கள். அதாவது கார்த்தீகை என்ற பெயரில் தீ வருகிறதல்லவா? அதனால்தான் இந்த பிரச்சனையாம். பேசாமல் பெயரை மாற்றி விடுங்களேன் என்கிறார்களாம். அட, இது ஒரு தீர்வா என்று குழம்பிப் போயிருக்கிறாராம் தயாரிப்பாளர்.
|