'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவைப் புதுமையான முறையில் நடத்தினார்கள். பழைய மகாபலிபுரம் சாலையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜூன் 23 அன்று நடைபெற்ற இந்த விழாவில் பாடலின் சூழ்நிலை, எழுதப்பட்ட வரிகள், இசையமைத்த விதம் ஆகியவை பற்றி சம்பந்தப்பட்ட கலைஞர்கள் விளக்கிய பின் பாடல்களை திரையிட்டார்கள்.
நான்கு பாடல்களையும் பார்த்து அசந்துபோன இளைய தளபதி விஜய், படத்தின் நாயகி பூரணாவின் நடிப்பை வியந்து பாராட்டினார். அப்போது, 'அசின் ஹிந்தி படங்களில் நடிப்பதற்காக மும்பையிலேயே செட்டில் ஆயிட்டதா சொல்றாங்க. அவங்க போனாலும், அவங்க இடத்தில் நடிக்க இன்னொரு அசின் கிடைத்திருக்கிறார்' என்று பூரணாவை பாராட்ட, சந்தோஷத்தில் முகம் சிவந்தார் பூரணா!
முன்னதாகப் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, குத்துப் பாடல்களை ஒரு பிடி பிடித்தார். ஒரு படத்தில் பத்து பாடல்கள் இருந்தாலும், அத்தனையும் குத்துப் பாடல்களாக இருக்க வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. இது மாற வேண்டும். குத்துப்பாடல்கள் அவசியம்தான். ஆனால் இலை முழுக்க ஊறுகாயை வைத்தால் சாப்பிட முடியுமா? என்றார்.
சற்றுத் தாமதமாக வந்த விஜய், வைரமுத்துவின் பேச்சை கேட்க முடியவிலை. அவர் யதார்த்தமாகக் குத்துப் படல்களை ஆதரித்துப் பேசினார். எனக்கு மெலடியை விட குத்துப் பாட்டுதான் ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் வந்த குத்துப் பாடல்கள் சூப்பர் என்றார்.
|