இன்னும் பத்து நாட்களுக்குள் சென்னை வந்து போலீஸ் அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறார் அசின்.
 அசினின் வேலைக்காரி பியூலா விஷயத்தில் அவரது அம்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய போலீஸ், படப்பிடிப்பில் அசின் பிசியாக இருப்பதால் இந்த விஷயத்தில் கொஞ்சம் பொறுமை காட்டியது. ஆனால் சொன்னபடி சென்னை வராமல் இழுத்தடித்த அவரைத் தேடி மும்பைக்கே போய்விட்டார்களாம். வேலைக்காரி பியூலாவும், தான் நன்றாக இருப்பதாகக் கூறியிருக்கிறார் போலீசாரிடம்.
ஆனாலும் வழக்கு வழக்குதானே? வேலைக்காரியோடு சென்னை வர வேண்டும். வந்த பின் மற்ற விஷயங்களை பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார்களாம். இதையடுத்து விரைவில் சென்னை வர இருக்கிறார் அசின்.
|