26-ந் தேதி நாளிதழ் பார்த்தவர்களுக்கு ஜெயம் ரவி மேல் பெரிய மரியாதையே வந்திருக்கும். ஒரே ஒரு படத்தில்தான் ஒளிப்பதிவாளர் ஜீவாவுடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார் அவர். ஆனால், அவரது மறைவு நாளான மேற்படி தினத்தில் தனது அஞ்சலியைத் தெரிவித்திருந்தார் அவர்.
 ஆர்யா, பூஜா, விநய் ஆகியோர் ஜீவாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். ஆனால் அவரது மறைவு நாளன்று அவருக்கு ஜெயம் ரவி நினைவஞ்சலி செலுத்தியிருந்தது திரையுலகத்தைக் கவனிக்க வைத்திருக்கிறது. இளம் நடிகர்களில் ரவியின் இணக்கமான அணுகுமுறை பல ஹீரோக்களையே வியக்க வைத்திருக்கிறது.
|