ஒளிப்பதிவாளர் ரவிவர்மனை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தருண்கோபி (இவரே ஹீரோவாக நடிப்பது வேறு விஷயம்). தனது மாஸ்கோவில் காவேரி படத்தை முடித்துவிட்டு நடிப்பதாக உறுதியும் கொடுத்திருக்கிறாராம் ரவிவர்மன்.
 இதற்கிடையில் மேற்படி படத்தின் டைட்டிலை 'பாண்டிச்சேரியின் காவேரி' என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று காதைக் கடிக்கிறார்கள் சிலர். என்னவாம்? தமிழநாட்டில் பாதி, மாஸ்கோவில் மீதியும் நடப்பதாகக் கதை. ஐம்பது சதவீதப் படப்பிடிப்பை மாஸ்கோவில் நடத்தலாம் என்று முதலில் சம்மதித்த ஆஸ்கார் நிறுவனம், பட்ஜெட் காரணமாக மாஸ்கோவுக்குப் பதிலாகப் பாண்டிச்சேரியில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டதாம்.
கிட்டதட்ட 75 லட்சம் சம்பளம் வாங்கும் ரவிவர்மன், இயக்குகிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதாலேயே தனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறினாராம். இயக்குவதற்கும் சம்பளம் இல்லை என்பது ஒரு புறம் இருக்க,. தனது கனவுப்படம் இப்படிச் சிதைந்துபோய்விட்டதே என்ற கவலையில் தவிக்கிறார் இயக்குநராக மாறிய இந்த ஒளிப்பதிவாளர்.
ஆனாலும் படம் சிறப்பாக வந்திருப்பதாகப் பாராட்டுகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
|