நடிகர் சங்கத்தைக் கட்டுக்கோப்பாக இயக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் சரத்குமார். அதில் முதல் திட்டமாக நடிகர் சங்கத்தில் உறுப்பினர் அல்லாதவர்கள் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். வருகிற 1-ந் தேதிக்குள் சங்கத்தில் உறுப்பினர் அல்லாதவர்கள் பதிவு செய்துகெதள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்.
 விளைவு? பல நாட்களாக டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்த தமன்னா உள்ளிட்ட 35 நடிகர் நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்திருக்கிறார்கள். மலையாளத்தைப் போலவே தமிழிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிற அஜ்மலும் சேர்ந்திருக்கிறார். ஒவ்வொரு உறுப்பினருக்கும் 25 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம்.
கையோடு கையாகத் தங்கள் சொல் பேச்சைக் கேட்காத மாளவிகா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் சரத்.
|