குசேலன் படத்தில் சிறப்பாக ஒத்துழைத்ததற்காகப் பசுபதிக்கு நன்றி சொன்ன ரஜினி, வடிவேலுவிடம் வேறொரு விஷயத்திற்காக மன்னிப்பு கேட்டாராம். போகிற வருகிறவர்களிடம் எல்லாம் சொல்லிப் புல்லரித்துக் கொண்டிருக்கிறார் வடிவேலு.
சேவல் படப்பிடிப்பிற்காகக் காரைக்குடியில் இருந்த வடிவேலுவை போனில் அழைத்த ரஜினி எடுத்த எடுப்பிலேயே மன்னிச்சிடுங்க என்றாராம். காரணம் புரியாமல் பதைபதைத்த வடிவேலுவிடம், குசேலன் படத்தில் என் பங்கை விட உங்க பங்குதான் அதிகம். ஆனால் விளம்பரங்களில் என் படத்தை மட்டுமே போடுறாங்க. அதுக்கு நான் காரணமில்லை. அதனால் என்னை மன்னிச்சிடணும் என்றாராம்.
கண் கலங்கிய வடிவேலு, உங்க படத்திலே நாங்க இருக்கிறதே பெருமை. இதிலே விளம்பரத்திலே வந்தா என்ன, வரலைன்னா என்ன? இதுக்குப் போயி பெரிய வார்த்தையெல்லாம் பேசணுமா என்றாராம்.
இப்போதெல்லாம் ரஜினி என்ற வார்த்தையை சொன்னாலே தன்னையறியாமல் கையெடுத்துக் கும்பிடுகிறார் வடிவேலு.
|