மன்மத ராசா பாடலுக்குப் பிறகு எங்கேயோ போயிருக்க வேண்டிய சாயாசிங், சில தவறான முடிவுகளால் தங்கச்சி வேடத்திற்குக் கூடப் பொருத்தமில்லாதவராகித் தமிழ் சினிமாவிலிருந்தே ஓரம் கட்டப்பட்டார்.
 தான் இயக்கும் வல்லமை தாராயோ உங்களுக்கு ஒரு ரீ என்ட்ரியாக இருக்கும் என்று சொல்லியே அழைத்து வந்தார் அப்படத்தின் இயக்குனர் மதுமிதா. ஆனாலும், சாயாசிங்கின் மார்க்கெட்டுக்கு எந்த வகையிலும் உதவவில்லை வல்லமை தாராயோ. இனிமேல் பிறரை நம்பிப் பிரயோஜனம் இல்லை என்று முடிவெடுத்து விட்ட சாயாசிங், நானே இயக்கி நானே நடிக்கப் போகிறேன் என்று கூறிவருகிறாராம் தனது நெருங்கிய தேதழிகளிடம்.
இதற்கிடையில் கதாநாயகி வேடம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரு பாடலுக்குக் குத்தாட்டம் போடுங்களேன் என்று கேட்டு நிறைய இயக்குநர்கள் அணுகுகிறார்களாம். அவர்களிடம், அப்படி ஆடும் எண்ணமும் இல்லை. கவர்ச்சியாக உடையணியவும் தயாராக இல்லை என்கிறாராம் கறாராக! இயக்கம்தான் போலிருக்கிறது.
|