பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மக்களின் இயல்பு வாழ்க்கையோடு விளையாடிவிட்டது. காய்கறி விலைகளும் ஏறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தத் தட்டுப்பாடு, சினிமாவையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான் வேடிக்கை.
அவுட்டோ ர் படப்பிடிப்புகள் பெரும்பாலும் ஜெனரேட்டர்கள் இல்லாமல் நடக்காது. இவற்றிற்கு டீசல் போட்டால்தான் இயங்கும். இந்நிலையில் சென்னையில் மட்டும் ஆறு படங்களின் படப்பிடிப்புகள் டீசல் இல்லாமல் கேன்சல் செய்யப்பட்டுள்ளனவாம்.
கண்களும் கவிபாடுதே என்ற படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கேயிருந்து படப்பிடிப்பு உபகரணங்களுடன் வேனில் குற்றாலத்திற்குச் சென்றுகொண்டிருந்த ஊழியர்கள், வழியில் டீசல் இல்லாமல் வண்டி நின்றதால் அவஸ்தைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்கள் இன்னும் போய்ச் சேராததால் அங்கேயும் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முக்கியமாக கேரவேன் பயன்படுத்தும் நட்சத்திரங்கள்தான் எரிச்சலில் நெளிகிறார்களாம்.
|