முன்பெல்லாம் ஈசியாகத் தொலைபேசியில் பிடித்துவிடலாம் பாவனாவை. இப்போது அப்படியல்ல. கதை சொல்ல வேண்டும் என்று போன் செய்வது முன்னணி இயக்குனர்கள் என்றாலும்,ஜெயம்கொண்டான் வரட்டுமே என்கிறார்.
 முன்பெல்லாம் தனது கேரக்டர் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் கதை கேட்டார் பாவனா. இனிமேல் கதையில் வரும் கேரக்டர்கள் ஒவ்வொன்றும் மனதில் நிற்கும்படியும், மொத்தப் படமும் ஹிட் பார்முலாவுக்குள் அடங்கும்படியும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்.
ஜெயம் கொண்டான் வந்தால், பாவனாவுக்கென்று ஒரு இமேஜ் உருவாகும் என்பதோடு, சம்பளத்தையும் கொஞ்சம் கறாராகப் பேசலாம் என்பது அவரது எண்ணம். அது ஈடேறும் வண்ணம் அமையட்டும் ஜெயம் கொண்டான்.
|