இன்னும் ஒரே வாரம். ஜெயிக்கப் போவது சன் டி.வி.யா அல்லது கலைஞர் டி.வி.யா என்பது தெரிந்துவிடும். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இரு அணிகளாக பிரிந்து நிற்பவர்களில் ஒரு அணி சன். மற்றது கலைஞர்.
 இதற்கிடையில் வாக்குச் சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன இரு தரப்பும். முன்னணி தயாரிப்பாளர்கள், மற்றும் பழைய தயாரிப்பாளர்களின் வீடுகளுக்கே சென்று வேட்டையை நடத்துகிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி வீட்டிற்கு சென்று ராம்குமாரிடம் ஓட்டுக் கேட்டார்கள். அப்போது இரு தரப்பினரும் நோகாதபடி பதில் சொல்லி அனுப்பினாராம் ராம்குமார்.
இதற்கிடையில் சென்னையின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று (ஜுலை-4) 4-ந் தேதி தயாரிப்பாளர்களுக்கு விருந்து கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறது பஞ்சு அருணாசலம், கேயார், ராதிகா தலைமையிலான அணி. அதே நேரத்தில் அதற்கு அடுத்த நாளான 5-ந் தேதி தயாரிப்பாளர்களுக்கு விருந்து கொடுக்கிறது இராம. நாராயணன் அணி. இதுவும் அதே ஹோட்டலில்.
|